இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று(06) முதல் சந்தைக்கு விநியோகம் செய்யப்படுமென ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி,பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட 1 கிலோ உப்புக் கட்டியின் விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்குமென லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்தார்.
Link : https://namathulk.com