காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதும், அதனை முழுமையாக அமெரிக்கா பொறுப்பேற்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டங்களை அந்நாட்டின் உயர் அதிகாரிகள் சிலர் மீளப்பெற்றுள்ளனர்.
குறித்த அறிவிப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளிடமிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் பாலஸ்தீனியர்களின் வெளியேற்றம் தொடர்பான அறிவிப்பை ட்ரம்ப் மேற்கொண்டார்.
எனினும், இந்த அறிவிப்புக்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் போரினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ள காசாவின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link : https://namathulk.com