கல்முனையில் கேரள கஞ்சா கடத்திய வியாபாரிகள் இருவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்ய கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 11கிலோ கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிளும், ஒரு தொகை பணமும் பொலிசாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com