2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கடந்த மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இவ்வருடம் குறிப்பிட்டளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சீனா, ஜேர்மன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, போலந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com