2025ஆம் ஆண்டிற்கான உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெப்ரவரி 10-13 வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயம் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி துபாயில் நடைபெறவுள்ள உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றுவார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவருடன் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com