ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் குடிமக்கள் பிரதேச செயலகத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக, 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் அதன் விண்ணப்ப ஏற்பு சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
அத்துடன், நிதி தொடர்பான விடயங்களை கையாளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்படும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், இச்செயற்பாடுகளை நெறிமுறைப்படுத்த புதிய டிஜிட்டல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் மூலமாக மக்கள் ஒன்லைன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன்,ஜனாதிபதி நிதியம் தொடர்பாக கடந்தக்காலத்தில் இடம்பெற்ற முறைக்கேடான விடயங்கள் விசாரிக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
Link : https://namathulk.com