திருகோணமலை, குமாரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் சமையல் எரிவாயுவினை பொருத்திக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீட்டிலிருந்த தளபாடங்கள், ஆடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், இதனால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com