திருக்கோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பலில் இருந்த மீனவரை வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் கரைக்கு கொண்டு வந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் உள்ளதாக கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மீனவரை கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டு கப்பலின் உதவியுடன் மீட்கப்பட்ட மீனவருக்கு அடிப்படை முதலுதவி அளிக்கப்பட்டு இன்று காலை கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடற்படையினர் கூறினர்.
அத்துடன், மீனவரை திருக்கோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளிலும் கடற்படையினர் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com