பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீடு போராட்டகாரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
டாக்காவிலுள்ள ஷேக் ஹசீனாவின் தந்தையின் வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷின் ஸ்தாபக தலைவரின் இல்லமே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்திற்கான நீதியை வழங்குமாறும் பங்களாதேஷ் மக்களிடம் முன்னாள் பிரதிமர் கோரியுள்ளார்.
ஒரு கட்டடத்தை அழிக்கலாம், ஆனால் வரலாற்றை அழிக்க முடியாது என கூறியுள்ள ஷேக் ஹசீனா, இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்களுக்கு வரலாறு பதில் சொல்லும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Link : https://namathulk.com