மட்டக்களப்பு, வாழைச்சேனை, ஓமானியாமடு பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் 63 வயதுடைய திருப்பழுகாமம் பகுதியை சேர்ந்தவரென பொலிசார் தெரிவித்தனர்.
உறவுமுறை சகோதரர்களுக்கிடையே காணப்பட்ட நீண்டகால முரண்பாட்டின் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com