மன்னார், பேசாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சித்த புறாக்கள், ஆபிரிக்க காதல் பறவைகள், பறக்கும் அணில்கள், மற்றும் மருந்துகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், பேசாலை பகுதியில் பொலிசார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வீதியில் பயணித்த லொறி ஒன்று சோதனையிடப்பட்டது.
அதிலிருந்து, 220 புறாக்கள், 20 ஆபிரிக்க காதல் பறவைகள், 08பறக்கும் அணில்கள், 30மருந்து மாத்திரைகள், மருந்து திரவியங்கள் அடங்கிய 40 போத்தல்கள் பொலிசாரினால் மீட்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட நபர்கள் தம்புள்ள மற்றும் கொழும்பில் வசிக்கும் 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட லொறி, விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் என்பவற்றோடு கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Link : https://namathulk.com