முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறியமை தொடர்பில் டயானா கமகேவிற்கு இன்று காலை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும் தாமதமாகி மன்றில் ஆஜராகிய டயானா கமகே, நகர்த்தல் பத்திரமொன்றை சமர்பித்து பிணை பெற்றுக் கொண்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதற்காக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com