கடைகளின் அகலத்தை குறைக்கும் யாழ்.மாநகர சபையின் செயற்பாட்டுக்கு
எதிராக யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியிலுள்ள பழக்கடை வியாபாரிகள் இன்று(06) கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் யாழ்.மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக பறிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
யாழ் மாநகரசபைக்கு தாம் கடைகளை அமைத்த ஆரம்ப காலத்திலிருந்து 3000 ரூபாவும்,தற்போது 7500 ரூபாவும் வரியாக செலுத்தும் நிலையில்
தற்போது மேலும் 300 ரூபா வரி உயர்வையும் ஏற்றுக் கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமது கடைகளின் முகப்பு,போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் கூறியமைக்கு இணங்க அதனையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு தாம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் தமது கடைகளின் அகலத்தை குறைப்பதற்கு யாழ்.மாநகர சபை மேற்கொள்ளும்
நடவடிக்கையால் தமது கடைகளின் இடப்பரப்பு மிகவும் குறுகி, தமது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
Link : https://namathulk.com