வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பணிப்புரைக்கு அமைய வட மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகளை,
வட மாகாண வர்த்தக,வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ”கூட்டுறவு காண்பகம்” விற்பனை நிலையத்திலும்,கைதடி கைதடி அம்மாச்சி உணவகம் முன்பாகவுள்ள ”கூட்டுறவு காண்பகம்” விற்பனை நிலையத்திலும்
ஆட்டக்காரி அரிசியை 260 ரூபாவிற்கும், வெள்ளைப் பச்சை அரிசியை 220 ரூபாவிற்கும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா கூட்டுறவுச் சங்கத்தில் மாத்திரமே அரிசி வகைகள் விற்பனைக்கு உள்ளதுடன், சிவப்பு பச்சை 220 ரூபா,வெள்ளைப் பச்சை 220 ரூபா,
பொன்னி 245 ரூபா,ஆட்டக்காரி 278 ரூபா,கீரிசம்பா 260 ரூபா,சம்பா 250 ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com