வளி மாசுபாடு சுவாச நோய்கள், இதய நோய்கள் மற்றும் மூளை நோய்கள் போன்ற பல நீண்டகால நோய்களை ஏற்படுத்துகிறது என விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கு வளி மாசுபாடு இரண்டாவது முக்கிய காரணமாக அமைவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வளிமண்டலத்தில் காணப்படும் சில கூறுகள் மனித ஆயுள் காலத்தை கணிசமாக குறைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
இதுவரை நடத்தப்பட்ட சுமார் 70, 000 அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகள் வளி மாசுபாட்டால் ஆண்டுதோறும் 7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளமையை உறுதிப்படுத்தப்படுவதாகவும் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
இதன் காரணமாக, சுவாச நோய் நிபுணர்கள் வளி மாசுபாடு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க கூறினார்.
Link : https://namathulk.com