அரகலய போராட்ட காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடாக மொத்தம் 122 கோடி ரூபா பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் 43 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் அம்பலமாகியுள்ளது.
இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.
இதன்படி, முன்னாள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தமாக 122 கோடி 40 இலட்சம் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.
இயற்கை பேரழிவின் போது முழுமையான சொத்து இழப்பீட்டிற்கே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை. 25 இலட்சம் ரூபாதான் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முன்னாள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அதிகளவான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தினர் எனவும் குற்றம் சுமத்தினார்.
நஷ்ட ஈட்டை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு ….
கபில நுவன் அத்துகோரல – 5 லட்சத்து 4 ஆயிரம் ரூபா.
விமலவீர திஸாநாயக்க – 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபா.
கீதா குமாரசிங்க – 9 லட்சத்து 72 ஆயிரம் ரூபா.
ஜானக திஸ்ஸ குட்டியராச்சி – 11லட்சத்து 43 ஆயிரம் ரூபா.
குணபால ரத்னசேகர – 14 லட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபா.
பிரேமநாத் சி.தொலவத்த – 23 லட்சம் ரூபா.
பிரியங்கர ஜயரத்ன – 23 லட்சத்து 48 ஆயிரம் ரூபா.
சம்பத் அத்துகோரல – 25 லட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபா.
ஜயந்த கடகொட – 28 லட்சத்து 14 ஆயிரத்து 800 ரூபா.
விமல் வீரவனஸ – 29 லட்சத்து 54 ஆயிரம் ரூபா.
பேராசிரியர் சன்ன ஜெயசுமண – 33 லட்சத்து 34 ஆயிரம் ரூபா.
அகில எல்லாவல – 35 லட்சத்து 54 ஆயிரத்து 250 ரூபா.
சமல் ராஜபக்ஷ – 65 லட்சத்து 39 ஆயிரத்து 374 ரூபா.
சந்திம வீரக்கொடி – 69 லட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபா.
அசோக பிரியந்த – 72 லட்சத்து 95 ஆயிரத்து 780 ரூபா.
சமன் பிரியா ஹேரத் – ஒரு கோடி 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபா.
ஜனக பண்டார தென்னகோன் – ஒரு கோடி 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபா.
ரோஹித அபேகுணவர்தன – ஒரு கோடி 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபா.
விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல – ஒரு கோடி 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபா.
சஹான் பிரதீப் – ஒரு கோடி 71 லட்சத்து 30 ஆயிரம் ரூபா.
ஷெஹான் சேமசிங்க – ஒரு கோடி 85 லட்சத்து 10 ஆயிரம் ரூபா.
இந்திக்க அனுருத்த – ஒரு கோடி 95 லட்சத்து 50 ஆயிரம் ரூபா.
மிலன் ஜயதிலக்க – 2 கோடி 23 லட்சம் ரூபா.
கலாநிதி ரமேஷ் பத்திரன – 2 கோடி 81 லட்சம் ரூபா.
துமிந்த திஸாநாயக்க – 2 கோடி 88 லட்சம் ரூபா.
கனகா ஹேரத் – 2 கோடி 92 லட்சம் ரூபா.
டி.பி.ஹேரத் – 3 கோடி 21 லட்சம் ரூபா.
பிரசன்ன ரணவீர – 3 கோடி 27 லட்சம் ரூபா.
டபிள்யூ.டி.வீரசிங்க – 3 கோடி 72 லட்சம் ரூபா.
சாந்த பண்டார – 3 கோடி 91 லட்சம் ரூபா.
எஸ்.எம்.சந்திரசேன – 4 கோடி 38 லட்சம் ரூபா.
சனத் நிஷாந்த – 4 கோடி 27 லட்சம் ரூபா.
சிறிபால கம்லத் – 5 கோடி 9 லட்சம் ரூபா.
அருந்திக பெர்னாண்டோ – 5 கோடி 52 லட்சம் ரூபா.
சுமித் உடுகும்புர – 5 கோடி 59 லட்சம் ரூபா.
பிரசன்ன ரணதுங்க – 5 கோடி 61 லட்சம் ரூபா.
கோகிலா குணவர்தன – 5 கோடி 87 லட்சம் ரூபா.
மோகன் பி டி சில்வா – 6 கோடி 1 லட்சம் ரூபா.
நிமல் லான்ஸா – 6 கோடி 92 லட்சம் ரூபா.
அலி சப்ரி ரஹீம் – 7 கோடி 9 லட்சம் ரூபா.
காமினி லொக்குகே – 7 கோடி 49 லட்சம் ரூபா.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – 9 கோடி 34 லட்சம் ரூபா.
கெஹலிய ரம்புக்வெல்ல -9 கோடி 59 லட்சம் ரூபா
Link : https://namathulk.com