பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பண மோசடி தொடர்பில் தற்போது பரவலாக பேசப்படுகிறது.தனது அண்ணாவின் மகனின் சம்பளத்தை அர்ச்சுனா முழுமையாக எடுத்துக் கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது .
அரச நிறுவனங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி, மக்களிடையே பிரபல்யம் தேடிய அர்ச்சுனா, தனது அண்ணனின் மகனை வேலைக்கு அமர்த்தி அவருடைய சம்பளத்தை முழுமையாக தாமே பெற்றுக்கொள்வது மோசடி என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்றத்தால் தனக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, மாதாந்த செலவுக்கு போதுமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.
இதனாலேயே ஆய்வு அலுவலராக தனது அண்ணாவின் மகனான இராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்ததாகவும், அவரின் 56 ஆயிரம் ரூபா சம்பளத்தை தனக்கே தருமாறு கோரியதாகவும் அர்ச்சுனா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான அனைத்து கொடுப்பனவுகளும் அடங்கலாக மாதாந்த வழங்கப்படும் சம்பளம் தனக்கு போதுமானதாக இல்லை என அர்ச்சுனா இராமநாதன் கூறியுள்ளார்.
ஊழல் ஒழிப்புக்காக மக்களிடம் பிரசாரங்களை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சென்ற இரமநாதன் அர்ச்சுனாவும் இவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
Link : https://namathulk.com