சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகளால் 2023 ஆண்டு இலங்கை பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்யப்பட தாலியை உடனடியாக மீள வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற, தாலியை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
புதிதாக திருமணமாகும் பெண்கள் தங்கத்தில் தாலி அணிவது வழக்கம் எனவும் , சுங்க அதிகாரிகள் தமது சோதனையின் போது அனைத்து மதத்தினதும் வழக்கங்களை மதிக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு தனது கணவருடன் பிரான்ஸ் செல்ல இருந்த நிலையில், அதற்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு தல யாத்திரை செய்வதற்காக சென்னை சென்ற இலங்கை பெண்ணின் தாலி உள்ளிட்ட தங்க நகைகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com