எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று கலந்துரையாடப்பட்டது.
யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இந்த கள்;அந்துரையாடல் நடைபெற்றது.
இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 4000 யாத்திரிகர்களும்,இந்தியாவை சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் என எண்ணாயிரம் யாத்திரிகர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்கள் என ஆயிரம் பேர் உள்ளடங்கலாக சுமார் ஒன்பதாயிரம் பேர் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
யாத்திரிகர்களுக்கான உணவு,தங்குமிட,போக்குவரத்து
வசதிகள் குறித்து ஆராயப்பட்டதுடன், யாத்திரிகர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவும்,15ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
யாத்திரிகர்களின் வசதி கருதி 14ஆம் திகதி காலை 04 மணிமுதல் யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் புறப்படுமெனவும் நெடுந்தீவிலிருந்து படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு ஒரு வழிக்கட்டணமாக 1000 ரூபாவும்,குறிகட்டுவானிலிருந்து கச்சதீவு செல்வதற்கு 1300 ரூபாவும் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
Link : https://namathulk.com