க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும்,மருதமுனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களிலும்
திண்மக் கழிவுகளை முழுமையாக அகற்றும் வேலைத்திட்டம் நேற்று(06) வியாழக்கிழமை இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டு மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத் திட்டம் மக்பூலியா பள்ளிவாசல் நிர்வாகத்தின்
முழுமையான பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பங்கேற்றிருந்தார்.
Link : https://namathulk.com