கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவின் ஏற்பாட்டில்
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
பொதுமக்களால் ஏற்கனவே முறையிட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்வு காணப்பட்டதுடன் ,மாகாண ஆளுநர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
Link : https://namathulk.com