இலங்கையின் சில பகுதிகளில் கொலை, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டு 03 இலங்கையர்கள் துபாயிலிருந்து இன்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் சந்தேகநபர்கள் அழைத்துவரப்பட்டனர்.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள சந்தேகநபர்களை உரிய பிரிவிற்கான பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com