GOVPAY, ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்தில் அமுலாக்கல், வௌிநாட்டு தூதரகங்களில் இலத்திரனியல் முறையில் பிறப்பு,திருமண மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் ஆகிய மூன்று திட்டங்களும் ஜனாதிபதியின் தலைமையில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது .
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் , ஜனாதிபதி செயலகத்தில் இன்று அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்தை நனவாக்கி, இந்த புதிய தளங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com