ஆர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸினிற்கு அண்மித்த புறநகர் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த கால்வாயில் ஆடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நிறச்சாயங்கள் கொட்டப்பட்டிருக்கலம் என சந்தேகிக்கப்படுகிறது.
அல்லது ஆடை உற்பத்தி நிறுவனங்களின் இரசாயன கழிவுக் கிடங்குகள் கால்வாயில் கலந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறம் மாறியதால் கால்வாயிலிருந்து மனம் வெளியேறி சுவாசிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
Link : https://namathulk.com