ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் , நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைத்திருந்த கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை சபைக்கு அறிவித்தார்.
ரஷ்ய இராணுவத்தில் இதுவரையில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்பிப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Link : https://namathulk.com