அரச தரவு பாதுகாப்பு மற்றும் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவின் DeepSeek AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தென்கொரிய தடை விதித்துள்ளது.
தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்கள் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தென்கொரியாவின் நிதி அமைச்சும் DeepSeek AI க்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கண்டுபிடிப்பான DeepSeek AI தொழில்நுட்பம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், முதல் நாளிலேயே அமெரிகாவின் பங்கு சந்தையில் பாரிய வெற்றியை கண்டது.
எவ்வாறாயினும் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகள் DeepSeek AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com