யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 152 ஓட்டங்கள் முன்னிலை..இன்று இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்.
14 ஆவது இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 152 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டு நாட்கள், இரண்டு இன்னிங்ஸ்களை கொண்ட துடுப்பாட்ட போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதற்கு அமைய முதலில் யாழ் அணி துடுப்பெடுத்தாடியது.
பந்து வீச்சில் கொழும்பு இந்து கல்லூரி சார்பில் யுவராஜ் 4 விக்கெட்களையும் நிதுஷன், தேஷ்கர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு தனது முதலாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் சந்தோஷ் 42 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நித்திஷ் 4 விக்கெட்களையும் சுபர்ணன், விதுஷன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
81 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களை பெற்றபோது முதலாம் நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.
துடுப்பாட்டத்தில் இந்துக் கல்லூரி சார்பில் பரிஸ்சித் 39 ஓட்டத்தை பெற்றார். பந்துவீச்சில் நிதுசன், யுவராஜ் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 152 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறுகிறது .
Link : https://namathulk.com