07 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 12ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தர, அஜித் ரோகன உள்ளிட்டவர்களுக்கும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் பிராந்தியங்களுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா, கிழக்கு, வடமேல், தென் மாகாணங்களுக்குமான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com