70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் இன்று மாலை 04 மணி வரையான முடிவுகளின் அடிப்படையில் 33 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் பாஜக சட்டப்பேரவை ஆட்சியை கைப்பற்றும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி இதுவரை 16 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிப்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் முன்னிலையில் உள்ள பாஜக வின் வெற்றி நல்லாட்சிக்கான வெற்றி என பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மக்களின் சக்தியே முதன்மையானது என பிரதமர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்