நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்சில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
நுவரெலியா நகரிலிருந்து தலவாக்கலை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட தனியார் பஸ்சில், நானுஓயா நகரில் சிலர் ஏறியுள்ளனர்.
பஸ்சின் டிக்கியில் வைத்திருந்த சில அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு குறித்த நபர்கள் நானுஓயா கிளரண்டன் பகுதியில் இறங்கி சென்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
சுமார் 50,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com