பிம்ஸ்டெக்கின் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே, பிரதமர் ஹரிணி அமரசூரியாவை பிரதமர் செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது, சுகாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு இத்துறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிம்ஸ்டெக்கின் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில், பிம்ஸ்டெக்கின் இயக்குநர் ஏ. சஜ் யு. மெண்டிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளியுறவு அமைச்சின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் உதவி இயக்குநர் பிரார்த்தனா கௌஷல்யா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Link : https://namathulk.com