தரமான சந்தையில் நுழைவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
ஏற்றுமதி துறைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் விதிவிலக்கான பங்களிப்புக்களை செய்த இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும்.
இன்றைய சந்தை உலகளாவிய சங்கிலியாக மாறியுள்ளதென கூறிய ஜனாதிபதி, அதில் பங்குதாரராக மாறுவதற்கு நாட்டுக்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறினார்.
மேலும், மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பை பேண புதுப்பிக்கத்தக்க எரிச்சக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறித்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளளப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com