கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஒருவர் உத்தியோகபூர்வ துப்பாக்கியை திரும்ப வழங்காது துபாய்க்கு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த பொலிஸ் சார்ஜன் நேற்று மாலை கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்திலிருந்து T-56 ரக துப்பாக்கியையும், அதற்கான 30 ரவைகளையும் பெற்றுச் சென்றுள்ளார்.
எனினும் அவர் கடமையில் ஈடுபடவில்லை என தகவல் கிடைத்ததும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன் நேற்றிரவு 10.15 க்கு பயணித்த விமானத்தின் மூலம் துபாய்க்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.
துபாய்க்கு சென்றுள்ள இவரை நாட்டிற்கு அழைப்பதற்கு சர்வதேச பொலிசாரின் உதவி கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 04 பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com