உலகில் சக்திவாய்ந்த கடவுச் சீட்டுக்களை கொண்டுள்ள 199 நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (The Henley Passport Index ) அமைப்பினால் 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடவுச் சீட்டுக்களின் தரவரிசை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டுக்களின் தரம் தொடர்பில் நிர்ணயிக்கும் குறித்த சர்வதேச அமைப்பானது 199 நாடுகளின் கடவுச் சீட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய உலகில் சக்திவாய்ந்த கடவுச் சீட்டை கொண்டுள்ள நாடாக சிங்கப்பூர் காணப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.
இரண்டாம் இடத்தில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
டென்மார்க் , பின்லாந்து, பிரான்ஸ் , ஜேர்மன் , அயர்லாந்து , இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்றன.
போர்த்துக்கல் உள்ளிட்ட 07 நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் நான்காம் இடத்தில் உள்ளன.
த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அமைப்பின் பட்டியலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டு 91 ஆவது இடத்தில் காணப்படுகிறது .
யுத்தம் காரணமாக உலகில் மிக மோசமாக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள சூடான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இதே இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எமது அயல் நாடான இந்தியா 80 ஆவது இடத்தில் உள்ளது
Link : https://namathulk.com