கொழும்பு இராஜகிரிய பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஜனவரி 06 ஆம் திகதி குறித்த சடலம் மீட்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று இரவு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
நுவரேலியா – அக்கரபத்தன மற்றும் பதுளை – நமுனுகல பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com