ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா, பிரதமர் ஹரிணி அமரசூரியவை பிரதமர் செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது, நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், க்ளீன் சிறிலங்கா திட்டத்திற்கு ஜப்பான் அரசு வழங்கும் பங்களிப்பையும் பாராட்டினார்.
அத்துடன், பாடசாலைகள் மறுசீரமைப்பு , வைத்தியசாலை அபிவிருத்தி திட்டங்கள்
மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நிப்போன் மன்றத்தின் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிப்போன் மன்றத்துடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இதுவரை இம்மன்றத்தினால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
Link: https://namathulk.com