யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வசிக்கும் 34 வயதான பெண்ணொருவர் பலத்த தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பகுதியில் அரச துறையில் உயர் பதவி வகிக்கும் பெண்ணொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Link: https://namathulk.com