நாடளாவிய ரீதியில் திடீரென ஏற்பட்ட மின் விநியோகத் தடை தொடர்பில் விசேட விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார விநியோக தடைக்கான உறுதியான காரணத்தை கண்டறியும் நோக்குடன் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் ஊடாக அறியக்கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இனி இவ்வாறு நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
இவாறான கடினமான சூழ்நிலையின் போது தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மின் பாவனையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com