நாட்டில் 80% பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் மின்சார விநியோகம் பகுதி அளவில் வழமைக்கு திரும்பியுள்ளது.
பாணந்துறை உப மின்னுற்பத்தி நிலையத்தின் விநியோக கட்டமைப்பில் குரங்கு பாய்ந்ததால் நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் 11.30 அளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.
இதனால் நீர்விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கும் சிலமணி நேரம் இடையூறு ஏற்பட்டது.
இருந்த போதிலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு சூரிய படலம் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் மின்சார இணைப்பை வழங்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், ஏனைய பகுதிகளில் வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com