அம்பாறை, சாய்ந்தமருது கடற்கரை வீதியை இணைக்கும் தோணா பாலம் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதனை செப்பனிடாது புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து அழகுப்படுத்தும் முயற்சிகள் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
2021 ஆம் ஆண்டு இப்பாலத்திற்கான திட்ட வரைபடம் வரையப்பட்டு, குறித்த திணைக்கள அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு முறையான அங்கீகாரம் கிடைத்தன் பின், அப்போதைய அமைச்சரவையின் கீழ் செயற்படுத்த இருந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான பணிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக, பிரதேச அரசியல்வாதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த புனர்நிர்மான வேலைக்கு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இந்தப் பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com