அம்பாறை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆடுகள விரிப்புக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ மூட்டியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
விளையாட்டுக்கழகமொன்றிற்கு சொந்தமான ஆடுகள விரிப்பு, அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று எரியூட்டப்பட்டுள்ளது.
சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மைதான ஆடுகள விரிப்பு தீக்கிரையாகியுள்ளது.
அம்பாறை தடயவியல் பொலிஸார் வரைவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com