இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் மலையகத்துக்கான முதலாவது கிளை நுவரெலியா கொட்டகலையில் இன்று(10) திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி நிலையமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Link : https://namathulk.com