அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25% வரியை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு பாரிய தாக்கம் ஏற்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமது நாட்டின் உற்பத்திகளுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான புதிய வரி அறவீடு தொடர்பில் நேற்றுமாலை நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.
கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் மிகப்பெரிய இரும்பு மற்றும் அலுமினிய விநியோகஸ்தர்களாக காணப்படுகின்றன.
ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பினால் தென்கொரிய இரும்பு மற்றும் கார் உற்பத்தி வீழ்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சில நிறுவனங்களின் பங்குகளின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இரும்பு உற்பத்தி நிறுவனமான POSCO பங்குகள் 3.6% வரை சரிந்துள்ளதுடன்,ஹூண்டாய் இரும்புகளின் பங்குகள் 2.9% வரை சரிந்துள்ளன.
கார் தயாரிப்பு நிறுவனமான Kia Corp இன் பங்குகளும் காலை வர்த்தகத்தின் போது 3.6% சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Link : https://namathulk.com