ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் கழிவுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் 28 அதிநவீன கம்பெக்டர் வாகனங்களை வாங்குவதற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவி கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றலுக்கான முயற்சிகளை கணிசமாக மேம்படுத்துவதோடு, நிலையான நடைமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய அளவிலான உறுதிப்பாட்டை உறுதி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கத்தின் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் இலட்சியத்திற்கு ஏற்ப, நாட்டின் பௌதீக சூழலை தூய்மையானதாக மாற்றும் எனவும் இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, இலங்கையின் தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Link : https://namathulk.com