க்ளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இத்திட்டத்துடன் இணைந்ததாக, மேற்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் 124 இடங்களில் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது மு.ப 8.00 முதல் மு.ப 11.00 வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 1,740 கிலோமீற்றர் கடற்கரைகளை சுத்தப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
Link : https://namathulk.com