கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பஸ்சில் பயணித்த ஒருவர் 2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் வசிக்கும் 38 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com