நிதித் தூய்தாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் செயலணி தற்பொழுது மீள்வுருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுடன் அணிசேரும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைகளின் கீழ் உயர்மட்ட அமைச்சு சார்ந்த பிரதிநித்துவத்துடன் இச்செயலணி மீளுருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியின் உறுப்பினர்களாக, நீதியரசர் புவுனகே அலுவிகார, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, தொழில் அமைச்சர் அணில் ஜெயந்த பர்ணாந்து, நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியபெரும, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட துணை ஆளுநர் நெலுமணி தவுலகல, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி அரந்தர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com