பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாடு, பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பபெற்றது.
நிலைபேறு தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறை கொள்கைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள க்ளீன் சிறிலங்கா திட்டம் குறித்தும் இதன்போது இலங்கை சபாநாயகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
வெளிப்படையான ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறையான தலைமைத்துவத்தை வலியுறுத்திய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள், ஊழலுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தல், நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார் பங்குடமைகளை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில், பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான துஷாரி ஜயசிங்க, கே.இளங்குமரன் மற்றும் சித்ரால் பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டனர்.
Link: https://namathulk.com