போர்நிறுத்தம் தொடர்பில் அழுத்தங்கள் வலுப்பெற்றாலும் காசாவை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாக ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஏற்கனவே விடுத்திருந்த நிலையில் , போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்கள் வலுபெற்றுள்ளன .
இதனை தொடர்ந்து ட்ரம்ப் தனது தீர்மானத்தை மீள உறுதிபடுத்தியுள்ளார்.
பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதையும், காசாவில் இருந்து இஸ்ரேலியர்கள் முழுமையாக வெளியேறுவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியை பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துள்ள நிலையில் விரைவில் பாதுகாப்பு சபையை கூட்டவுள்ளதாக சர்வதேசூடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com