யாழ்.மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதிகளை, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் நேற்றிரவு (09) சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சீனாவால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
Link : https://namathulk.com